Breaking News

அரூர் பகுதிகளில் பாக்கு மரக்கன்று நடுவதில் விவசாயிகள் ஆர்வம் - நடப்பாண்டில் சுமார் 1.50 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பு

அரூர்: தருமபுரி மாவட்டத்தில் மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால் விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது.

மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 4 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 740 ஹெக்டேர் சாகுபடி பரப்பாகக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஓரளவு நீர்வளம் மற்றும் மண்வளம் மிக்கப்பகுதிகளை கொண்டுள்ளது, அதனால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மாறிவரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் முன்னோடியாக விளங்கி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/m49QDZx
via

No comments