ஸ்ரீ பெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் 21-ம் தேதி ராகுல் காந்தி அஞ்சலி
சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் 21-ம் தேதி நடைபெறும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தில் ராகுல்காந்தி பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-ம் ஆண்டு நினைவுதினம் வரும் 21-ம் தேதி நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அன்று காலை 8 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் ராகுல் காந்தி பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oTCE27J
via
No comments