Breaking News

புகையிலை தயாரிப்புக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது - `ஹான்ஸ்’ தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: பொதுநலனுக்குத் தீங்கு விளைவிக்கும் புகையிலை தயாரிப்புக்குத் தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஏ.ஆர்.பச்சாவட் என்ற நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது நிறுவனம் `ஹான்ஸ்’ என்ற பாக்கெட் பொருளை இறக்குமதி செய்து, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விற்பனை செய்து வருகிறது. ஹான்ஸ் பொருளை இறக்குமதி செய்வதற்காக, உரிய வரி செலுத்தி வருகிறோம். ஆனால், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஹான் ஸுக்கு தடை விதித்து, அவற்றைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IrH4PYp
via

No comments