Tamil News Live Today: பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டம்! - பங்கேற்காத முதல்வர்கள் யார் யார்?!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று எட்டாவது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே அமலில் இருந்த திட்ட கமிஷனுக்கு மாற்றாக, 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும் உருவாக்கப்பட்டதுதான் நிதி ஆயோக் என்னும் அமைப்பு. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பணிகள் உள்ளிட்ட சில முக்கிய பணிகளை இந்த நிதி ஆயோக் செய்து வருகிறது. நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இந்த அமைப்பின் ஆட்சி மன்ற குழுவில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் ஆட்சி மன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி கடைசியாக கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற இருக்கிறது
நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை வைக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நதிஷ்குமார், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க போவதில்லை என தெரியவந்துள்ளது. நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.
from India News https://ift.tt/Jfn58Wu
No comments