Breaking News

நீர் தேக்கத்தில் விழுந்த செல்போன்; 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி தேடிய அதிகாரி! - அதிர்ச்சி

சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் விஸ்வாஸ். கடந்த திங்கட்கிழமை விடுமுறைக்காக அங்குள்ள கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு இவர் சென்றிருகிறார். 15 அடி ஆழ நீர்தேக்கதுக்கு அருகில் இவர் சென்றபோது அவரது விலையுயர்ந்த செல்போன் நீர்த்தேக்கத்தில் விழுந்திருக்கிறது.

ராஜேஷ் விஸ்வாஸ்

உடனே அவர் அங்கிருந்த தொழிலாளர்களிடம் தனது செல்போனை தேடுமாறு உத்தரவிட்டு தேட கூறியிருக்கிறார். இதையடுத்து மோட்டார் பம்ப் கொண்டு வரப்பட்டு, நீர்த்தேக்கத்தில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள், நீர்த்தேக்கத்திலிருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வெறியேற்றப்பட்டு வியாழக்கிழமை காலையில் அவரது செல்போன் மீட்கப்பட்டது.

இதுகுறித்து ராஜேஷ் விஸ்வாஸ், ``ரூ.1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எனது செல்போன் நீர்த்தேக்கத்தில் விழுந்துவிட்டது. இதுகுறித்து நீர்வளத்துறை, துணை வட்டார அதிகாரியிடம் பேசினேன். அங்கு தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரால் எந்தப் பயனும் இல்லை என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் 5 அடி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. செல்போனை தேடி எடுத்தும் செல்போன் வேலை செய்யவில்லை” எனத் தெரிவித்திக்கிறார்.

நீர்த்தேக்கம்

நீர்த்தேக்கத்தில் இருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அதன் நீர்மட்டம் 10 அடி குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனிடையே உணவு ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸை கான்கெர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/Pln6BTf

No comments