'பளளயல பயஙகரவதகள வறயடடம' - உகணடவல 42 பர உயரழபப; நடநதத எனன?!
கிழக்கு ஆப்பிரிக்காவில் உகாண்டா இருக்கிறது. இங்கு கடந்த 1986-ம் ஆண்டு முதல் அதிபர் யொவேரி முசேவேனியின் ஆட்சி நடக்கிறது. இவர் நேட்டோ படையுடன் மிகவும் நட்பாக இருந்து வருகிறார். மறுபுறம் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவதாக, அவர்களின் ஒருபகுதியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இதையடுத்து 1990-களில் ஏடிஎப் (ஜனநாயக கூட்டணி படை) என்ற பயங்கரவாத அமைப்பை தோற்றுவித்தார்கள். இந்த அமைப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீது பெரும் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறார்கள். அந்த நாட்டு ராணுவமும் கடுமையான நடவடிக்கைகளை பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தாக்குதல்கள் குறைந்தபாடு இல்லை.
இந்த அமைப்பானது 1998-ம் ஆண்டில் பள்ளி ஒன்றில் நடத்திய தாக்குதலில் 80 மாணவர்கள் பலியாகினர். இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் நடந்த தாக்குதலில் 19-பேர் உயிரிழந்தனர். இவ்வாறு கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை ஏடிஎப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த அமைப்பில் சுமார் 500 தீவிரவாதிகள் வரை இருப்பதாக கூறப்படுகிறது.
அண்டை நாடான காங்கோவில் முகாமிட்டுள்ள அவர்கள் அடிக்கடி உகாண்டாவுக்குள் ஊடுருவி, தங்களது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அடுத்த தாக்குதல் தற்போது அரங்கேறியிருக்கிறது. அங்கிருக்கும் காங்கோ எல்லையில் இருந்து பாண்ட்வோ நகரில் இருக்கும் பள்ளிக்கு 25 பயங்கரவாதிகள் வந்தனர். அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் உட்பட இருவரை சுட்டுக்கொன்றனர்.
பின்னர் பள்ளி வளாகத்தின் உள்ளே சென்ற அவர்கள், ஒவ்வொரு அறையாக சென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மேலும் மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். சிலரை கத்தியாலும் குத்தினர். மேலும் அங்கு தீ வைத்தனர். இதில் 38 மாணவர்கள் உட்பட 42 பேர் பலியாகினர். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருக்கிறது.
பிறகு அங்கிருந்த உணவு கிடங்கை சூறையாடிய பயங்கரவாதிகள், அதை கொண்டு செல்வதற்கு 6 மாணவர்களை கடத்தி சென்றனர். தற்போது அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உகாண்டா பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ், "தீவிரவாதிகள் பள்ளியில் நடத்திய தாக்குதலில் 38 மாணவர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 6 பேர் கடத்தி செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
from India News https://ift.tt/it5xbMr
No comments