Tamil News Today Live: தரவரரல கலஞர கடடம... இனற தறநத வககறர பகர மதலவர நதஷ கமர!
திருவாரூரில் கலைஞர் கோட்டம்... இன்று திறந்து வைக்கிறார் நிதிஷ் குமார்!
திருவாரூர் மாவட்டம் காட்டூரில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுரஅடி பரப்பில் கட்டப்பட்டுள்ள `கலைஞர் கோட்டம்’ திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இது நடைபெறுகிறது.
விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் திறந்து வைக்கின்றனர். விழாவில் பங்கேற்பதற்காக சிறப்பு விமானம் மூலம் திருச்சி வரும் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் ஆகியோர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வருவதாகவும், பின்னர் அங்கிருந்து கார் மூலம் காட்டூர் வந்து, விழாவில் பங்கேற்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவே திருவாரூர் வந்து, சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ளார். மேலும் நேற்று கலைஞர் கோட்டம் வந்து ஆய்வு மேற்கொண்டார். விழா ஏற்பாடுகள் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டார்.
from India News https://ift.tt/YQgAevO
No comments