Breaking News

500 கடகளல எஙகள ஊர கட பயர ஏன இலல?" - டஸமகக மட வலயறதத பரடய மககள

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டத்தில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மது வாங்க வருபவர்கள், அருகில் உள்ள பேரூராட்சி திருமண மண்டபத்திலும், விளை நிலங்களிலும் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விட்டுச் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், இதனால் அந்த வழியாக பகல், இரவு நேரங்களில் பெண்கள் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் கூறி, 'டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்' என கடந்த ஆறு ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அரசு அதிகாரிகள், தமிழகத்தில் விரைவில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாகவும், அதில் இந்த கடையும் உள்ளதாகவும் பொதுமக்களிடம் சமாதானம் கூறி, அவர்களை கலைந்துபோக வைத்தனர். இந்நிலையில், நேற்று தமிழக அரசு வெளியிட்ட தமிழகத்தில் மூடப்படுவதாக கூறிய 500 டாஸ்மார்க் கடைகளில் பழைய ஜெயங்கொண்டம் டாஸ்மாக் கடை பெயர் இடம் பெறவில்லை. இதனால், ஆவேசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் முன்பு போராட்டம் நடத்திய மக்கள்

அப்போது, அந்த டாஸ்மாக் கடையினை பூட்டு போட்டு பூட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர், லாலாப்பேட்டை காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார், அரசு டாஸ்மாக் உதவி மேலாளர் மதிவாணன் மற்றும் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் பத்மா ஆகியோர் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த பொதுமக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது, டாஸ்மாக் உதவி மேலாளர் மதிவாணன், "தற்போது இங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இனி விற்பனைக்காக திறக்கப்படாது. கடையில் உள்ள மது பாட்டில்களை சில நாட்களுக்குள் கடையை திறந்து எடுத்துக் கொள்ள இருக்கிறோம்" என்று பொதுமக்களிடம் உறுதி கொடுத்தார்.

இதனையடுத்து, சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதேநேரம், "ஏற்கனவே வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதுபோல், அதிகாரிகள் எங்களை இந்தமுறையும் ஏமாற்ற நினைத்தால், அடுத்தமுறை எங்களின் போராட்ட வேகம் இன்னும் அதிகமாக இருக்கும்" என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



from India News https://ift.tt/xMDIl3G

No comments