Breaking News

செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை; ரெய்டு குறித்து அமைச்சர் கூறியதென்ன?

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்கள், அவரின் சகோதரர் உட்பட உறவினர்களின் வீடுகளில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில், இன்று சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை

இதற்கு முன்னதாக செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பாக தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. சென்னை மட்டுமில்லாமல், கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.

ஏற்கெனவே கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களால் அதிகாரிகள் கார் கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. பின்னர் அதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு போலீஸ் தரப்பில் ஒருபக்கம் விசாரணை நடந்துவரும் வேளையில், செந்தில் பாலாஜி வீட்டிலும், அவரின் சகோதரர் வீட்டிலும் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். எதற்காக இந்த சோதனை என்பது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் இன்னும் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சோதனை முடிவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறையின் இந்த சோதனை குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ``என்ன நோக்கத்துக்காக வந்திருக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். வருமான வரித்துறையாக இருந்தாலும், அமலாக்கத்துறையாக இருந்தாலும் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயார். எந்த ஆவணங்களைக் கைப்பற்றினாலும் அதைப் பற்றி விளக்கம் தர தயார்" என்று கூறினார்.



from India News https://ift.tt/ZKm05xG

No comments