Breaking News

வளளககடன இமசலப பரதசம: பதபதகக வககம வடய கடசகள!

டெல்லி, இமாசலப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்ரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மலைப் பிரதேசமான இமாசலப் பிரதேசத்தில் கடந்த 6 நாள்களாக பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

சிம்லா, குலு, மண்டி உள்ளிட்ட 13 பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது. 9 இடங்களில் காட்டாற்று வெள்ளத்தில் வாகனங்கள், வீடுகள், உடமைகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. சில இடங்களில் பாலங்கள் ஆற்றில் மூழ்கியிருக்கின்றன. மண்டி மாவட்டத்தில் பீஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆத் - பஞ்சரை இணைக்கும் பாலம் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.

அதானால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆற்றின் கரையைக் கடந்த வெள்ளம் பல கிராமங்களை மூழ்கடித்திருக்கிறது. அதனால், அங்கு வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். சிம்லாவில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், குலு, சம்பா பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேரும் உயிரிழந்திருக்கின்றனர்.

இதற்கிடையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இமாசலப் பிரதேசத்தின் 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கைவிடுத்திருக்கிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. வட மாநிலங்களில், 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஏராளமான ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டிருக்கிறது.



from India News https://ift.tt/uLKxFhV

No comments