Breaking News

கடதம - ரபள - ரபபட' அமசசர ரகபத ஆளநர ரவ இடய ஓயத கடதப பர!

தமிழகத்தில், கடந்த ஒரு வாரமாக மழை விட்டு விட்டு பெய்கிறது. ஆனால், அரசியல் கடித மழைகள் விடாமல் பொழிந்து வருகின்றன. கடந்த 5.7.2023 அன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு, எழுதிய கடிதத்தில், அதிமுக அமைச்சர்கள் மீது பதியப்பட்ட வழக்கு மற்றும் நிலுவையில் உள்ள ’13 மசோதக்கள்’ பெண்டிங்கில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கடிதம், எழுதியிருந்தார். இந்தக் கடித்தத்திற்கு விளக்கத்தை ராஜ் பவன் வெளியிட்டிருந்தது. இதற்குப் பதிலாக ரகுபதியும் கடிதம் எழுதியுள்ளார். நடந்தது என்ன?

ரகுபதி

முதல் கடிதம்!

கடந்த 5-ம் தேதி ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்தில், ``முன்னாள் அதிமுக அமைச்சர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா மீதான ’குட்கா வழக்கில் நீதிமன்ற விசாரணையை முன்னெடுக்க சிபிஐ அனுமதி கோரியது. அதற்கு கடந்த 12.09.2022 அன்று ஆளுநர் அலுவலகத்துக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டது.

அதேபோல, முன்னாள் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், அனுமதி கோரியது. அதன் கடிதங்களை முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கான ஒப்புதலை ஆளுநர் தரவில்லை.

ஆளுநர் பதில் கடிதம்

மேலும், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே, விசாரணைக்கு அனுமதித்தும், மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிட வேண்டும்” என கடிதம் எழுதினார்.

`ஆளுநர் பதில் அறிக்கை!’

இதற்கு பதில் தரும் விதமாக ஆளுநர் மாளிகை ஒரு பதில் கடிதத்தை வெளியிட்டது. அதில், ``சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா மீதான வழக்கை சிபிஐ விசாரிக்கறது. முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்கு மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை எந்த விசாரணை அறிக்கையும் அனுப்பவில்லை. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கிற்கு அனுமதி கேட்டு எந்த கோரிக்கையும் ராஜ்பவனில் பெறப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக மீண்டும் 6-ம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஊழல் வழக்கு விசாரணையின் ஃபைல்கள் ஆளுநருக்கு 12.9.2022 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் இறுதி விசாரணை அறிக்கை, ஆணையத்தின் பரிந்துரை அனைத்தும் அடங்கியிருக்கிறது. '298' நாட்களுக்கு முன்பு உறுதிசெய்யப்பட்ட இறுதி விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்டு, கோப்பைப் பெற்றுக் கொண்டதற்கு ஒப்புதல் கையெழுத்தும் போட்டுவிட்டப் பின்னரும் உறுதி செய்யப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை எனக் கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல.

ஆளுநர் மாளிகையில் ’ஒப்புதல் சீட்டு’

அதேபோல, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையின் இறுதி விசாரணை அறிக்கை, விஜிலென்ஸ் ஆணையத்தின் பரிந்துரை ஆகியவை அடங்கிய ஒரிஜினல் கோப்பு ஆளுநருக்கு 15.5.2023 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கோப்பைப் பெற்றுக் கொண்டதற்கு ராஜ்பவன் ஒப்புதல் கடிதமும் அளித்துள்ளது. நிர்வாக நடைமுறைப்படி அனுப்பி வைக்கப்பட்ட அந்த கோப்பு ராஜ்பவனுக்கு வரவில்லை என 53 நாட்கள் கழித்து ராஜ்பவன் வெளியிட்டிருக்கும் செய்தி வியப்பாகயிருக்கிறது.” என பதிலளித்துள்ளார். தமிழக அரசு அனுப்பியிருந்த கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை ’ஒப்புதல் சீட்டு’ வெளியானது.

இந்தப் பிரச்னைகளுக்கு மத்தியில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க சென்றிருக்கிறார். அவர்கள் இருவரும் 50 நிமிடத்துக்குப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்தப் பத்திரிகையாளர் ப்ரியன், “ திமுக-வுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பதுதான் அளுநருக்கு மத்திய அரசு கொடுத்த அசைன்மென்ட். ஆனால், அதை அவசரமாக நிறைவேற்ற எண்ணி, தனக்குத் தானே ’ஆப்பு’ வைத்துக்கொள்கிறார். அது தான்அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடந்தது. அதுதான் இந்தக் கடித விவகாரத்திலும் நடந்திருக்கிறது. மத்திய பாஜக-வின் அறிவுறத்தலின் பெயரில்தான் ஃபைல்களை நிறுத்தி வைத்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ப்ரியன்

தவிர, ’அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு எந்த அனுமதி கடிதமும் வரவில்லை ‘என மழுப்பிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம், தேர்தல் வரும்போது அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டில் பேரம் செய்வதற்குத்தான். அப்போது இந்த வழக்குகளைப் பிரதானமாக வைத்துதான் அதிக இடங்களைப் பாஜக கைப்பற்ற திட்டமிட்டிருக்கிறது.

ஆளுநரிடம் ’நேர்மை’ என்றுமே இருந்ததில்லை. கோவையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின், தமிழ்நாட்டில் ’50’ இடங்களில் குண்டு வெடித்ததாகப் பொய் சொன்னார், என்.ஐ.ஏ தாமதமாக விசாரித்தது, சிதம்பரத்தில் இரட்டை விரல் சோதனை எனப் பொய் மட்டுமே பேசுகிறார். தற்போதும் கூட கிடைக்கப்பெற்ற கோப்புகள், ஆளுநர் மாளிகைக்கு வரவில்லை என அடுக்கடுக்காகப் பொய் சொல்கிறார். அதற்கு ஆதாரமாக ஒப்புதல் சீட்டு (அக்னாலேஜ்மென்ட்)வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்

அது பற்றி கேட்டால் என்ன சொல்லுவார் ஆளுநர், ‘எனக்குத் தெரியாது’ ஆளுநர் மாளிகையின் செயலாளர் அனுப்பியதாக சொல்வாரா?... அநியாயமான விசயத்தைக் கூட நியாயமான தோற்றத்தில் செய்ய கற்றிருக்க வேண்டும். அது தெரியாமல் மீண்டும் குட்டு வாங்குகிறார் ஆளுநர். பல விசயங்களில் உண்மைக்குப் புறம்பான தகவலைத் தருகிறார். நியாயமாக செயல்படவேண்டும். ஆனால், அப்படி செயல்படாமல் இருப்பதால் அவர்மீது விமர்சனம் வலுக்கிறது” என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், ``ஆளுநர் தவறான(Mis Information) தகவலை சொல்கிறார் என்பது ஒருபக்கம், மறுபக்கம் அவர் மக்களிடம் அரசு பற்றி தவறான தகவலை வெளியிட்டு (Dis Information) அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்கச் செய்கிறார். ’கோப்புகளை அரசு அனுப்பவில்லை’ என்னும் தவறான தகவலை மக்களிடம் பரப்பி, திமுக அரசுக்கு கெட்டப் பெயர் வாங்க வைக்க முயல்கிறார். அதனடிப்படையில் தான் அடுத்தடுத்து தவறான தகவலை சொல்லி வருகிறார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

குறிப்பாக, சிதம்பர ‘தீட்சிதர் குழந்தை திருமணம்’, பெண்டிங் மசோதாக்கள், செந்தில் பாலாஜி விவகாரம், அதிமுக அமைச்சர்கள் வழக்கு விசாரணை என நான்கு நிகழ்வுகளில் பொய் பேசியிருக்கிறார். அதிகாரப்பூர்வமாக அவர் பொய் பேசுவதைக் கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். அவருக்கு எதிராக திமுக போரட்டம் நடத்தியது, இனியும் நடத்தும். ஆனால், இனி ஒரே போராட்டம்தான். அது ’2024-நாடாளுமன்ற தேர்தல்’ களத்தில் தான் நடக்கும்” என முடித்துக் கொண்டார்.



from India News https://ift.tt/s25qOjk

No comments