Breaking News

UCC: அரசயலமபப மதன தககதல' - ஆம ஆதமய எதரதத கஜரத பழஙகடயனத தலவர ரஜனம!

மத்திய பா.ஜ.க அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகப் பேச ஆரம்பித்திருக்கிறது. 2018-ம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-வது இந்திய சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ``மதச்சார்பின்மை என்பது பெரும்பான்மையின் குரலால் சிறுபான்மை மதத்தினரின் குரல் மட்டுமல்ல பிராந்திய இனங்களின் குரலும் ஒடுக்கப்படக் கூடாது என்பதுதான். எனவே, பொது சிவில் சட்டம் என்பது தேவையற்றது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி, ``பொது சிவில் சட்டத்தை கொள்கையளவில் ஆதரிக்கிறோம்'' எனத் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குஜராத் மாநிலத்தின் 2022-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நர்மதா மாவட்டத்திலுள்ள நந்தோட் (ST) தொகுதியில் போட்டியிட்ட, குஜராத் ஆம் ஆத்மி கட்சியின் பழங்குடியினத் தலைவரான பிரபுல் வாசவா, அந்தக் கட்சியைக் கண்டித்து, தலைமைப் பதவியை ராஜினாமா செய்து, கட்சியிலிருந்து விலகியிருக்கிருக்கிறார்.

இது குறித்து அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், ``மணிப்பூரில் தொடர்ந்து பழங்குடியினர் கொல்லப்பட்டுவருகின்றனர். இதற்கு காரணமான மத்திய அரசின் அடிப்படைவாதம் மற்றும் வெறுப்பு அரசியலை எதிர்க்குமாறு ஆம் ஆத்மி கட்சியை வலியுறுத்துகிறேன். பொது சிவில் சட்டம் அரசியலமைப்பின் மீதான தாக்குதல்.

பிரபுல் வாசவா

பொது சிவில் சட்டம் பழங்குடியினர், பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், சிறுபான்மையினர் மற்றும் பிற சமூகங்களின் அரசியலமைப்பு உரிமைகள், வாழ்க்கை முறை மற்றும் சமூக கட்டமைப்பை அச்சுறுத்தும் சட்டமாகும். பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சியால் பேச முடியாது. அதே நேரத்தில் பழங்குடியினரின் சிறப்பு உரிமைகளைப் பறிக்கும் சட்டத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கமுடிகிறது" என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/6hn7A9b

No comments