Breaking News

மதுரை: "மேக்கேதாட்டூ விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அரசியல் செய்கிறது" - கர்நாடக முன்னாள் துணை முதல்வர்

கர்நாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா, ஒரு காலத்தில் கர்நாடக பா.ஜ.க-வில் செல்வாக்கோடு இருந்தவர். மாநிலத் தலைவர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் என இருந்தவர், கடந்த பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை விவகரத்தால் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

கே.எஸ் ஈஸ்வரப்பா

கட்சியில் ஓரங்கட்டப்பட்டதால் தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தவர், சமீபத்தில் நடந்த தேர்தலில் தன் மகனுக்கு சீட் வழங்குங்கள் என்று கேட்டும் கட்சித்தலைமை வழங்கவில்லை.

அழகர் கோயிலில்

அதைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக்கியவர், மதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பட தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு அடிக்கடி வருகை தருகிறார். இந்நிலையில் நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயிலில் குடும்பத்தினருடன் வழிபட்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரப்பா, ``கர்நாடகா ஷிமோகா தொகுதியில் அண்ணாமலை 3 முறை பிரசாரம் செய்தார். தமிழ் மக்கள் வாழும் பகுதியில் அண்ணாமலை செய்த பிரசாரத்தால் அத்தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.

கே.எஸ்.ஈஸ்வரப்பா

மேக்கேதாட்டூ அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அரசியல் செய்கிறது, இரு மாநில மக்களுக்கும் தண்ணீர் அத்தியாவசியமானது, முக்கியமானது. காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் நாட்டு நலனுக்கு உகந்தல்ல" என்றவர்,

" எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் வெற்றி பெற முடியாது. பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர்" என்றார்.



from India News https://ift.tt/yQhlfDY

No comments