கோவையில் பாதுகாக்கப்பட்டு வரும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு பணியை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி. மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் மனு கொடுக்கும் போராட்டம். தென்காசி: சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் மேல்நிலை படிப்பு முடித்து கல்லூரியில் சேர முடியதவர்களுக்காக `நான் முதல்வன் திட்டம்' முலம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிசந்திரன் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். சிக்கல் சிங்கார வேலவர் (நவநீதேசுவர சுவாமி) கோயில் 5/6/2023 கும்பாபிஷேகம் விழா நாளை நடைப்பெற உள்ளது. கேரள மாநிலம். இடுக்கி மாவட்டம், குமிழி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, இன்று இடுக்கி மாவட்டம் முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. நவீன விவசாயி புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கலந்துகொண்டு வெளியிட, வானதி சீனிவாசன் பெற்றுக்கொண்டார். அருகில் மாநிலத் தலைவர் அண்ணாமலை. தமிழக பாஜக மாவட்டத் தலைவர்கள், மாநில அணி, பிரிவு நிர்வாகிகள் கூட்டம் தமிழக பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வின்போது, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம் இடம்: சென்னை, நுங்கம்பாக்கம் ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலையை சரி பார்க்கும் பணியை அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார். ஈரோடு ரங்கம்பாளையம் கலைக்கல்லூரி ரிங் ரோட்டில் இருந்து திண்டல் செல்லும் வழியில், ரோட்டின் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது இதனை மாநகராட்சி கண்டுகொள்ளுமா? ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆர்.எஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் சாலைகள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் முத்துசாமி. அருகில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உட்பட பலர் உள்ளனர். மின்துறையில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க திரண்டு வந்த பணியாளர்கள். கீழ்பவானி சீரமைப்பு வேலைகளை நிறைவேற்றக் கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த விவசாயிகள். ஈரோடு அருகே உள்ள வடமும் வெள்ளோடு ஆர்.எஸ் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட நியாய விலைக் கடைகளை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு உணவுப் பொருள்களை அமைச்சர் முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோர் வழங்கினர். அருகில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உட்பட பலர் உள்ளனர். தஞ்சையில் நடவு பணிக்காக நிலத்தை தயார் செய்யும் விவசாயி. தூத்துக்குடி: மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் சுழல் காற்றானது 45 முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள். இராமநாதபுரத்தில் பருத்தி விலை கிலோ ரூ.110 லிருந்து ரூ.40-ஆக குறைந்ததால், மேய்ச்சலுக்கு கால்நடைகளை வைத்து பருத்தி செடிகளை விவசாயிகள் அழித்தனர். புதுச்சேரிக்கு வருகை தந்த இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானை போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா வரவேற்றார். புதுச்சேரிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகையை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் சொத்துகளை அபகரித்த பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் உட்பட அரசு அதிகாரிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி, தெய்வ தமிழ் பேரவையினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். புதுச்சேரியில் காதலனை திருமணம் செய்துவைக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை, அவருடைய காதலனுக்கு காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் திருமணம் செய்துவைத்தனர். புதுச்சேரியில் அதிகப்படியான மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டனர். புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் சொத்துகளை அபகரித்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்-மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான வைத்திலிங்கம் ஆதாரங்களுடன் பேட்டியளித்தார். புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் ராஜீவ் காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், புதுச்சேரி மணவெளி தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 9 லட்சம் ரூபாய் நிதி உதவியை சபாநாயகர் செல்வம் வழங்கினார். வேலூர் காட்பாடி கல்புதூர் சாலை வசதி கோரி பெண்கள் போராட்டம். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திடக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம். தென்காசி: நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை ஆட்சியர் துரை.ரவிசந்திரன் கொடியசைத்து துவக்கிவைத்தார். திருநெல்வேலி: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுவரும் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். திமுக ஆட்சியில் மந்த நிலையில் நடைபெறும் மதுரை மாநகராட்சி பணிகளை துரிதபடுத்த கோரியும், வார்டுகளில் மக்களின் அடிப்படை வசதிகளை விரைந்து முடித்திட கோரியும் முன்னாள் அமைச்சர் செல்லூர் K.ராஜூ மதுரை மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தார். from India News https://ift.tt/y1PxkuX
No comments