Tamil News Today Live: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு!
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு!
அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி, பண மோசடி செய்ததாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. முதலில் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28-ம் தேதி வரையில் நீதிமன்றக் காவல் வழங்கியது நீதிமன்றம்.
அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தும், அவர் சிகிச்சையில் இருந்ததால், அவரை தங்களால் விசாரிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் 28-ம் தேதி , செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இன்று செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவு பெறுகிறது.
from India News https://ift.tt/5bpDziv
No comments