இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் இரவு நேர கார் பந்தயம்: டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவைட் லிமிடெட் ஆகியவை இணைந்து ‘சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்’என்ற பெயரில் கார் பந்தய போட்டியை சென்னையில் நடத்த உள்ளனர்.
எஃப் 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் ஆகியவை வரும் டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னை தீவுத் திடல் மைதானத்தில் 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் மின்னொளியில் இரவு நேர போட்டியாக நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்த போட்டி இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் இரவு நேரத்தில் சாலையில் நடத்தப்படும் முதல் கார் பந்தய போட்டி என்ற பெருமையை பெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியிலும் 4 டிரைவர்கள் இருப்பார்கள். இதில் 2 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவார்கள். மேலும் ஒலிம்பிக் விதிமுறைகளின் படி ஒரு வீராங்கனையும் இருப்பார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GZoQrz4
No comments