ஸ்குவாஷில் தங்கம் வென்றார் அனாஹத்

டேலியன்: ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனையான அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றார்.
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் உள்ள டேலியன் நகரில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், 3-1 என்ற கணக்கில் ஹாங்காங்கின் ஏனா குவாங்கை வீழ்த்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SL7Y8Qn
No comments