Breaking News

2024 தேர்தல்: ``முடிந்தால் இந்த தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடுங்கள்" - ராகுலுக்கு ஒவைசி சவால்

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதி எம்.பி-யான அசாதுதீன் ஒவைசி, பா.ஜ.க-வை எதிர்க்கும் அதேவேளையில் காங்கிரஸையும் தீவிரமாக எதிர்த்துவருகிறார். 2024-ல் பா.ஜ.க-வை வீழ்த்தவேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் `இந்தியா' கூட்டணியில் இணையாத ஒவைசி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் மூன்றாவது அணியில் இணைய பல்வேறு கட்சிகள் தயாராக இருப்பதாகவும், அது குறித்து சந்திரசேகர ராவிடம் பேசிவருவதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஒவைசி

இந்த நிலையில் ஒவைசி, வரும் லோக் சபா தேர்தலில் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடாமல், இந்த தொகுதியில் என்னை எதிர்த்துப் போட்டியிடுங்கள் சவால் விட்டிருக்கிறார்.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற கட்சி பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்திக்கு சவால் விட்ட ஒவைசி, ``உங்கள் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டில் போட்டியிடாமல் ஹைதராபாத்தில் என்னை எதிர்த்துப் போட்டியிடுமாறு நான் சவால் விடுக்கிறேன்.

நீங்கள் (ராகுல் காந்தி) தொடர்ந்து பெரிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறீர்கள். எனவே களத்தில் இறங்கி என்னை எதிர்த்துப் போராடுங்கள். காங்கிரஸ்காரர்கள் நிறைய சொல்வார்கள், ஆனால் நான் தயாராகத் தான் இருக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியில்தான் பாபர் மசூதியும் இடிக்கப்பட்டது, தலைமைச் செயலக மசூதியும் இடிக்கப்பட்டது" என்று கூறினார்.

ராகுல் காந்தி

முன்னதாக கடந்த வாரம் துக்குகுடாவில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, ``ஒவைசி கட்சியின் மீது எந்த வழக்கும் இல்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமே தாக்கப்படுகின்றன. மோடி ஒருபோதும் தனக்கு நெருக்கமானவர்களைத் தாக்குவதில்லை. அவர் உங்கள் முதல்வர் (கே.சி.ஆர்) மற்றும் ஒவைசி கட்சித் தலைவர்களை தனக்கு நெருக்கமானவர்களாகவே கருதுகிறார். அவர்கள் ஒருவரையொருவர் தனித்தனி கட்சிகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றாகக் கூட்டு வேலை செய்கிறார்கள்" என்று பா.ஜ.க, ஆளும் பி.ஆர்.எஸ் மற்றும் ஒவைசி கட்சியைத் தங்கியிருந்தார்.

தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சிக்கு ஆதரவாக ஒவைசி நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/ilPwUbO

No comments