Breaking News

உலகக் கோப்பை நினைவுகள் | இலங்கையின் வெற்றியும், இந்தியாவின் கண்ணீரும்...

முந்தைய 5 உலகக் கோப்பை தொடர்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட வகையில் 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இந்தமுறை மொத்தம்
12 அணிகள் பங்கேற்றன. 2 பிரிவுகளில் தலா 6 அணிகள் பிரிக்கப்பட்டன. ரவுண்ட் ராபின் மற்றும் நாக்-அவுட் முறையில் ஆட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தியா, இலங்கை, பாகிஸ்
தான் ஆகிய 3 நாடுகள் இணைந்து போட்டியை நடத்தின.

இந்தியாவில் 17 ஆட்டங்களும், பாகிஸ்தானில் 16 ஆட்டங்களும், இலங்கையில் 4 ஆட்டங்களும் நடத்தப்பட்டன. இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள சென்ட்ரல் வங்கி மீது வெடி
குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தியதால் இலங்கையில் நடந்த லீக் ஆட்டங்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவும், மேற்கு இந்தியத் தீவுகளும் மறுத்துவிட்டன. இதனால் இலங்கை
அணி, ஒரு ஆட்டத்திலும் பங்கேற்பதற்கு முன்னதாகவே கால் இறுதிக்குத் தகுதி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Iy6w9lb

No comments