Breaking News

`எங்க இங்க இருந்த ட்ரான்ஸ்பார்மர காணோம்?’ - அதிகாரிகள் 'ஷாக்'... அம்பலமான முறைகேடு?!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரப்பள்ளம், ராமசாமிபட்டி, கிளாமரம், ரெட்டப்புளி உள்ளிட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணறு அமைத்து வாழை, தென்னை, கத்தரி, மிளகாய், வெண்டை, தக்காளி, உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில் அப்பகுதியில் மின்மாற்றிகள் இல்லாததால், குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஆழ்துளை கிணறுகளில் இருந்து மின் மோட்டார் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வந்தனர்.

இதனால் தங்கள் கிராமத்திற்கு மின் மாற்றிகள் அமைத்து தரக்கோரி அப்பகுதி கிராம மக்கள் ராமநாதபுரம் ஆட்சியர் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். அதன் பலனாக கடந்த 2021-ம் ஆண்டு அந்த கிராமத்தில் புதிய மின் மாற்றிகள் அமைக்க அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்காடு அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

அதன்படி கோரப்பள்ளம் கிராமத்தில் புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மின்மாற்றி பொருத்துவதற்கான இரண்டு மின்கம்பங்கள் நடப்பட்டு, கம்பிகள் வைக்கப்பட்டதோடு மூன்றாண்டுகளாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் கேட்டபோது, `கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கோரைப்பள்ளம் கிராமத்தில் மின் மாற்றி அமைக்கப்பட்டு விட்டதாக’ பதில் அளித்துள்ளனர்.

நீங்கள் அமைத்ததாக சொல்லப்படும் இடத்தில் வெறும் மின்கம்பங்கள் மட்டுமே இருப்பதை ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்ட போது, "ட்ரான்ஸ்பார்மர காணோமா" என 'ஷாக் ரியாக்ஷன்' கொடுத்து, `என்னன்னு விசாரிப்போம், நீங்க போயிட்டு வாங்க’ என அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள், அப்பகுதி பெண் விவசாயிகள் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்காமலே அமைக்கப்பட்டதாக சொல்லப்படும் மின்கம்பம் முன்பாக முக்காடு அணிந்து அமர்ந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்மாற்றியை அமைக்காமலேயே அமைத்ததாக முறைகேடு செய்துள்ள மின்வாரியத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/1uTCdLr

No comments