Breaking News

`பிடித்த ரெஸ்டாரன்ட்டுகளுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறோம்'- மனைவியுடன் கோயிலில் வழிபட்ட ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட உலக தலைவர்கள் ஜி-20. மாநாட்டுக்காக டெல்லிக்கு வந்திருக்கின்றனர். உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இரு நாடுகளிடையேயான உறவு மற்றும் முதலீடு, தொழில் குறித்துப் பேசினார். நேற்றே ``கோயிலுக்குச் சென்று வழிபட நேரம் கிடைக்கும் என்று நம்புகிறோம். நாங்கள் டெல்லியில் ரெஸ்டாரன்ட்டுகளுக்குச் செல்ல ஆர்வமாக இருக்கிறோம்" என்று ரிஷி சுனக் குறிப்பிட்டிருந்தார். இன்று காலையில் உலக தலைவர்கள் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

ரிஷி சுனக்

அதற்கு முன்பாக தன்னுடைய மனைவி அக்‌ஷதாவுடன் டெல்லி அக்‌ஷர்தாம் கோயிலுக்குச் சென்று ரிஷி சுனக் வழிபட்டார். அவர் அக்‌ஷர்தாம் கோயிலில் தலைகுனிந்து வழிபட்டார். அதோடு அங்கு ஆன்மிக சேவையில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். ரிஷியின் வருகையையொட்டி கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக இந்தியா வந்துள்ள ரிஷி சுனக், பிரதமர் நரேந்திர மோடிமீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

அக்‌ஷர்தாம் கோயிலில் வழிபட்ட பிறகு நேரடியாக மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மற்ற உலக தலைவர்களுடன் சேர்ந்து மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார் ரிஷி சுனக். அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார். மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு வந்த தலைவர்களை பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி வரவேற்றார். அவர்கள் அனைவரும் அங்கு ஒவ்வொரு மரக்கன்றுகளை நட்டனர். அதனைத் தொடர்ந்து ஜி-20 மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டத்திற்கு தலைவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.



from India News https://ift.tt/tchEjxS

No comments