Breaking News

பிரதமர் மோடியின் அந்த ஒரு அறிவிப்பு... 12 ஆண்டுகால சபதத்தை முடித்துக்கொண்டு காலணி அணிந்த விவசாயி!

தெலங்கானாவில் 12 ஆண்டுகளாக காலணி அணிய மாட்டேன் என வைராக்கியமாக இருந்த 71 வயது விவசாயி ஒருவர், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் தனது சபதத்தை முடித்துக்கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள பாலேம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சள் விவசாயி, மனோகர் ரெட்டி. தன்னைப் போன்ற மஞ்சள் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என எண்ணிய இவர், தன் மாவட்டத்தில் மஞ்சள் விவசாய வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.

மஞ்சள்

விரும்பியதோடு மட்டும் நிற்காமல், தனது மாவட்டத்தில் மஞ்சள் வாரியம் நடைமுறைக்கு வரும் வரை காலணிகளை அணிய மாட்டேன் என 2011-ல் சபதமும் எடுத்தார். மேலும், மனோகர் ரெட்டி அதே ஆண்டில், நவம்பர் 4-ம் தேதி அடிலாபாத் மாவட்டத்திலுள்ள இச்சோடாவிலிருந்து திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் வரை 63 நாள்கள் பாதயாத்திரையும் சென்றார். மனோகர் ரெட்டி சபதம் எடுத்து 12 வருடங்கள் ஆகிவிட்டது.

இந்த நிலையில், தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதை முன்னிட்டு, தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் மோடி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தெலங்கானாவுக்கு வருகை தந்தார். பின்னர், மகபூப்நகர் மாவட்டத்தில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து வைத்த மோடி, `தெலங்கானாவில் மஞ்சள் வாரியம்' அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

பிரதமர் மோடி

இந்த நிலையில் மோடியின் இத்தகைய அறிவிப்பால் உற்சாகமடைந்த மஞ்சள் விவசாயி மனோகர் ரெட்டி, மோடிக்கு நன்றி தெரிவித்து தனது 12 ஆண்டுகால சபதத்தை முடித்துக்கொண்டு மீண்டும் காலணி அணிந்தார். மஞ்சள் உற்பத்தியில் உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவில், தெலங்கானா மாநிலம் ஆண்டுக்கு மூன்று லட்சம் டன்னுக்கும் அதிகமான மஞ்சளை உற்பத்தி செய்து தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இது, இந்தியாவின் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 28 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/ODABpwZ

No comments