Breaking News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 200 ரன்கள் இலக்கை போராடி வென்றது இந்திய அணி

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ixc3RLB

No comments