``துரதிஷ்டவசம்; இந்தியப் பிரிவினை நடந்திருக்கக் கூடாது..!" - ஒவைசி சொல்வதென்ன?
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு, இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று முகமது அலி ஜின்னா உட்பட பல இஸ்லாமிய தலைவர்கள் வலியுறுத்தியதன் பேரில் 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் என்ற தனி நாடு பிரிக்கப்பட்டு, பிரிட்டிஷாரால் சுதந்திரம் வழங்கப்பட்டது.
இதற்குப் பின்னால் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் இருக்கின்றன. அதுவே, இந்தியப் பிரிவினை என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், `இந்தியப் பிரிவினை நடந்திருக்கக் கூடாது' என அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் தலைவரும், எம்.பி-யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்திருக்கிறார்.
இந்தியப் பிரிவினை குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய ஒவைசி, ``வரலாற்று ரீதியாக இந்தியா ஒரே நாடு. துரதிஷ்டவசமாக இந்தியா பிரிக்கப்பட்டது. இது நடந்திருக்கக் கூடாது. இதைத்தான் என்னால் சொல்ல முடியும். ஆனால், நீங்கள் ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்தால், இந்த நாட்டின் பிளவுக்கு யார் காரணமென்று நான் சொல்கிறேன். ஏனெனில், அன்று நடந்த ஒரு வரலாற்றுத் தவறுக்கு ஒற்றை வரியில் என்னால் பதில் சொல்ல முடியாது.
இந்தியப் பிரிவினை நடந்திருக்கக் கூடாது. அது தவறான செயல். அப்போதிருந்த அனைத்து தலைவர்களுமே இந்தப் பிரிவினைக்குப் பொறுப்பு. மௌலானா அபுல் கலாம் ஆசாத் எழுதிய ‘இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் (India Wins Freedom)’ என்ற புத்தகத்தை நீங்கள் படித்தால், நாடு பிளவுபடக் கூடாது என்று அனைத்து காங்கிரஸ் தலைவர்களுக்கும் மௌலானா ஆசாத் வேண்டுகோள் விடுத்தார் என்பது தெரியும். மேலும், இந்த இரண்டு நாடு கோட்பாட்டை அன்றைய இஸ்லாமிய அறிஞர்களும் எதிர்த்தனர்" என்று கூறினார்.
from India News https://ift.tt/IbOMNia
No comments