Breaking News

``இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை அதிமுக பேசுவது திருப்புமுனைதான்” - சொல்கிறார் ஆளுர் ஷா நவாஸ்

`காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்தில் கர்நாடகா அரசை கண்டிக்கிறோம் என்ற சொல்லே இல்லையென வானதி சீனிவாசன் கொதிக்கிறாரே!”

``சட்டப்படியான நடவடிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சரியாக, கூர்மையான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை அரசியல் நோக்கத்துடன் அணுகுவது அறியாமை. காவிரி விவகாரத்தில் காங்கிரஸை கண்டிக்க வேண்டுமென்றாலும், பா.ஜ.க உட்பட எல்லாரையும்தான் கண்டிக்க வேண்டும். அரசு தண்ணீரை திறந்துவிடக் கூடாதென முன்நின்று போராடுகிற கட்சி தானே பா.ஜ.க.”

காவிரி விவகாரம்

```நீதிமன்ற தீர்ப்புகளை காங்கிரஸ் அரசு பின்பற்ற வலியுறுத்துகிறோம்’ என்பதுகூட தீர்மானத்தில் இல்லையென எடப்பாடி ஆதங்கப்படுகிறாரே!”

``யார் கதவை தட்ட வேண்டுமோ அங்கே தட்டுகிறோம், கர்நாடகாவை கண்டிப்பது, கோரிக்கை வைப்பதெல்லம் பழைய காலம், இது புதிய காலம், நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு காவிரி நதிநீர் மேலாண்மை அமைக்கப்பட்டது. ஆணையம் அமைக்கப்பட்டாலே இரண்டுபேரும் பேசவேண்டியதில்லை. இந்நிலையில் கர்நாடகாவிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள், கண்டித்துப் பேசுங்கள் எனச் சொல்பவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள் என்றே பொருள்.”

``வாக்கு கேட்க கர்நாடக காங்கிரஸோடு கைகோர்த்த திருமாவளாவன், காவிரி நதிநீரைஉரிமையை பெற்றுதர என்ன செய்தார் என நாம் தமிழர் கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்களே!”

``காவிரி பிரச்னை எப்படி அணுக வேண்டுமென்ற தெளிவில்லாததன் விளைவுதான் இது. தேர்தலில் ஆதரவு என்பது அகிய இந்திய அரசியல் நிலைப்பாடுகளை பொறுத்தது. இதையும் காவிரி விவகாரத்தையும் முடிச்சிப் போடுவது சரியாக இருக்காது.”

ஆளூர் ஷா நவாஸ்

``இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்தும் சட்டமன்றத்தில் பேசியிருந்தீர்களே...ஆளும் தி.மு.க, எதிர்க்கட்சி அ.தி.மு.கவும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறார்களே?’’

‘‘அ.தி.மு.க இவ்விவகாரத்தை கையிலெடுத்திருப்பது உண்மையிலேயே ஒரு பெரிய திருப்புமுனைதான். அ.தி.மு.க இவ்விவகாரத்தில் கையெடுப்பதற்கு முன்பே தி.மு.க ஆதிநாதன் கமிட்டி அமைத்து, அதன் பரிந்துரையை ஏற்று, ஆளுநருக்கு தீர்மானமாகவே அனுப்பிவிட்டது. ஆக, எதிர்க்கட்சிகளின் குரலே இல்லாமல், தி.மு.க செய்தது மிகப்பெரிய நகர்வு!’’

சட்டமன்றத்தில்... எடப்பாடி பழனிசாமி

``மாநில அரசே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யலாம் என்ற வாதத்தை எப்படி பார்க்குறீர்கள்...?”

‘‘மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்திதான் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. 161-வது பிரிவின்கீழ் சிறப்பு தீர்மானம் இயற்றினாலும் அதை ஆளுநருக்குத்தான் அனுப்ப வேண்டும். அதையும் அவர் கிடப்பில்தான் போடப் போகிறார். எனவே, இந்த விவகாரமும் எழுவர் விடுதலையைப் போலவே நீதிமன்றத்துக்குத்தான் நாம் நகர்த்த வேண்டும்!’’

```உங்கள் தொகுதியின் முக்கிய 10 கோரிக்கைகளை சமர்பித்திருப்பீர்கள்.. அதனை அரசு பரிசீலித்துள்ளதா?”

``நான் கொடுத்த 10 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. எனது கோரிக்கையின் அடிப்படையில் 31 கோடி ரூபாய் செலவில் நாகை புறநகர் பேருந்துநிலையம், நாகூர் சில்லடி கடற்கரை மேம்பாடு, சிக்கல் சிங்காரவேலர் கோவிலின் பால்குளம் புதுப்பிப்பு உள்ளிட்ட நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதைத்தாண்டி எம்.எல்.ஏ நிதியிலிருந்தும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன”

ஆளுர் ஷா நவாஸ்

`மகளிர் உரிமைத் தொகை திட்டம் தேர்தலை தீர்மானிக்கக் கூடியதென சட்டமன்றத்தில் பேசியுள்ளீர்கள், தி.மு.க தேர்தலுக்காகத்தான் கொண்டு வந்திருக்கிறதென எதிர்க்கட்சியினர் என்கிறார்களே?”

`மகளிர் உரிமைத்தொகை திட்டம் சமூக மேம்பாட்டுக்கான முதலீடு, இப்படியான முன்னோடி திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவந்திருக்கிறோம் எனப் பேசினேன். இந்தியாவில் எங்கே இனி தேர்தல் நடந்தாலும் இந்த திட்டம் பற்றிய அறிவிப்பில்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது என்பதைதான் தேர்தலை தீர்மானிக்கும் கூடியதென குறிப்பிட்டேன். கர்நாடகா, வட மாநிலங்களில்கூட இத்திட்டத்தை முக்கியமான திட்டமாக பார்க்கிறார்கள்.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/lo4exGU

No comments