Breaking News

சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டாமா?! - நீதிமன்றம் சொல்வது என்ன?

`சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றத் தேவையில்லை!' என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி

கடந்த 1998-ம் ஆண்டு, தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையில், `சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் 50 சதவீதத்துக்கு மேலாக சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்க கூடாது' என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவை நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி நிர்வாகம் மீறி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டிருக்கிறது. இதனால், அந்தக் கல்லூரிக்கு வழங்கப்பட்டு வந்த சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தை நீட்டிக்க மறுத்து, தமிழக உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், 1998-ம் ஆண்டு போடப்பட்ட தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்தும், தமிழக உயர் கல்வித்துறையின் நீட்டிக்க மறுத்த உத்தரவை எதிர்த்தும் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ``சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்தை சிறுபான்மை பிரிவினருக்கும் மீதமுள்ள 50 சதவீதத்தை மதிப்பெண் தகுதி அடிப்படையிலும் சேர்க்க வேண்டும். தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது தேசத்தின் நலன் சார்ந்தது. சிறுபான்மை அந்தஸ்து என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குத்தான்!" எனக்கூறி வாதிட்டார்.

நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி

அதைத்தொடர்ந்து வழக்கு குறித்துப் பேசிய நீதிபதிகள், ``தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணைய சட்டப்படி, கல்வி நிறுவனங்களின் சிறுபான்மை அந்தஸ்து குறித்து முடிவெடுக்க ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சிறுபான்மை அந்தஸ்து குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. அனைத்து சிறுபான்மையினருக்கும் அரசியலமைப்பில் கல்வி, மொழி ஆகியவற்றில் உரிமை தரப்பட்டிருக்கிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, இடஒதுக்கீட்டு கொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது.

சென்னை உயர் நீதிமன்றம்

50 சதவீத இடங்களில் சிறுபான்மையினரை சேர்த்தாலும், மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு தகுதி அடிப்படையில் சிறுபான்மையினர் போட்டியிடலாம். அப்படி மாணவர்கள் சேரும் பட்சத்தில் அந்த இடங்கள் 50 சதவீதக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கருத முடியாது. எனவே, மனுதாரர் கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்த அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது!" என உத்தரவிட்டிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/Ud8nzDf

No comments