Breaking News

``தமிழ்நாட்டில் மாநில அரசு கட்டுப்பாட்டில் கோயில்கள்... ஏன்?!” - பிரதமர் மோடி பேசியது என்ன?!

தமிழ்நாட்டில், கோயில்கள் விவகாரத்தில் மாநில இந்து சமய அறநிலையத்துறை அத்துமீறுவதாக, தமிழ்நாடு பா.ஜ.க பலமுறை குற்றம்சாட்டியிருக்கிறது. அண்மையில் கூட, சனாதன விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரைக் கண்டித்து அண்ணாமலை ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்.

மோடி

இந்த நிலையில், `தமிழ்நாட்டிலிருக்கும் கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம்' என்று தி.மு.க-வின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி சாடியிருக்கிறார்.

தெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ``தமிழ்நாட்டிலிருக்கும் கோயில்களின் சொத்துக்களையும், வருமானங்களையும் மாநில அரசு முறைகேடாகப் பயன்படுகிறது. கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

ஆனால், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்களை மாநில அரசு தொடுவதில்லை. இந்து கோயில்களின் மீது மட்டும் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில், `எவ்வளவு மக்கள் தொகையோ அதற்கேற்றவாறு உரிமை' என காங்கிரஸ் பேசிவருகிறது. இவ்வாறு பேசும் காங்கிரஸ், கோயில்களை மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துமா? குறிப்பாகத் தமிழ்நாட்டில் தனது கூட்டணி கட்சியிடம் கோயில்களை விடுவிக்குமாறு காங்கிரஸ் கூறுமா?" என்று கேள்வியெழுப்பினார்.

மோடி

மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் தெலங்கானா முதல்வரை விமர்சித்த மோடி, ``ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க 48 இடங்களில் வெற்றி பெற்றபோது, கே.சி.ஆர் டெல்லியில் என்னைச் சந்திக்க வந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாகக் கூறினார். கூடவே, தனக்கும் ஆதரவளிக்குமாறு கேட்டார். அப்போது, `உங்களின் செயல்பாடுகளால் மோடி உங்களுடன் இணைய மாட்டார்' என அவரிடமே கூறிவிட்டேன்" என்றார்.

தெலங்கானாவில் இந்தாண்டு இறுதியில் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/517Ff8u

No comments