Breaking News

``எவ்வளவு நன்மை செய்தாலும், எடப்பாடி துரோகம் மட்டுமே செய்வார்!” - மருது அழகுராஜ் அட்டாக்!

``அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிந்துவிட்டதால் ஓ.பி.எஸ் பா.ஜ.க-வுடன் கைகோர்ப்பார் எனப் பேசப்படுகிறதே..!”

``மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வாய்ப்புள்ள கட்சியாக பா.ஜ.க இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். மேலும் மத்திய பா.ஜ.கவும் ஓ.பி.எஸும் நெருங்கிய தொடர்பில்தான் இருக்கிறார்கள். எங்கள் தேர்தல் நிலைப்பாட்டை பொறுத்தவரை தேர்தல் நெருக்கத்தில் நாங்கள் அறிவிப்போம்.”

பன்னீர், எடப்பாடி, மோடி

``கூட்டணி முறிவு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறதே பா.ஜ.க?!”

``பா.ஜ.க பல்வேறு மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி, `எங்களுக்கு எடப்பாடியெல்லாம் ஒரு பொருட்டல்ல’ என பா.ஜ.க கருதுவதால் அமைதியாக இருக்கிறது.”

``எடப்பாடி பா.ஜ.க-வை உதறிவிட்டார் என்பதற்காக, உங்கள் பக்கம் வந்தால், பா.ஜ.கவும் சந்தர்பவாத அரசியல் கட்சிதானே!”

மோடி, எடப்பாடி பழனிசாமி

``அரசியல் என்பது சந்தர்ப்பவாதத்தின் மையம் தான். ஆனால் அதிலும் குறைந்தபட்ச நியாய தர்மம் இருக்க வேண்டும். . ஒ.பி.எஸ்-ஐ அழைத்தால் நான் வரமாட்டேன் என்று எடப்பாடி சொல்லியிருக்கலாம். அதனால் அழைக்காமல் விட்டிருக்கலாம். ஓ.பி.எஸ் நம்பிக்கையானவர்.. முதலில் நம்பிக்கையற்ற எடப்பாடியை உள்ளே அழைத்துக் கொள்ளலாம் என்கிற ரீதியில் பா.ஜ.க அந்த முடிவை எடுத்திருக்கலாம். மோடிக்கு வலது பக்கம் எடப்பாடியை உக்கார வைத்தார்கள். இப்போது பின்பக்கமாக ஓடிவிட்டார். எவ்வளவு நன்மைகளை செய்தாலும் எடப்பாடி துரோகம் மட்டுமே செய்வார் என்பதை இப்போது பா.ஜ.க புரிந்திருக்கும்.” 

``2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான மூன்றாவது அணியாக உருவாகும் என நம்புகிறீர்களா?”

``எடப்பாடியின் அபகரிப்பு அரசியலையும், தி.மு.க-வின் நிர்வாக திறமையற்ற கொடுங்கோல் ஆட்சியையும் எதிர்க்கக் கூடிய சக்திகள் ஓரணியில் திகழ்வார்கள். அதேசமயம் காங்கிரஸை ஏற்கக் கூடியவர்கள் I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதுபோல் பா.ஜ.க-வை ஏற்பவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பார்கள். அப்படி ஓரணியில் திரள்பவர்களை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. அதனை காலம்தான் முடிவு செய்யும்”

ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்

``அந்த கூட்டணிக்குள் டிடிவி தினகரன், ஜி.கே வாசன், பா.ம.க போன்ற கட்சிகள் இணைவார்களா?”

``நிச்சயமாக இணைவார்கள், அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.”

மருது அழகுராஜ்

``அதேசமயம், கூட்டணி முறிவு நாடகம்தான் என்றும் விமர்சிக்கப்படுகிறதே!”

``இதனை நாடகமாக நாங்கள் பார்க்கவில்லை. எடப்பாடியோடு பா.ஜ.க நாடகம் நடந்த எடப்பாடி ஒன்றும் நாடறிந்த தேசிய தலைவரல்ல. எடப்பாடி ஆதரவு தெரிவித்தால்தால் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற அளவுக்கு ஒன்றும் பா.ஜ.க வலுவிழந்த கட்சியுமல்ல”.

``நாடாளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் மீண்டும் இணைவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. அது குறித்து..!”

`` கூட்டணியில்லை என அறிவித்துவிட்டு, வேட்டு வைத்து கொண்டாடிவிட்டு, பா.ஜ.க ஒரு வேஸ்ட் லக்கேஜ் என்றெல்லாம் விமர்சித்துவிட்டு மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி எனச் சென்றால் மக்கள் கல்லால் அடிப்பார்கள்!”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/MKs82Jf

No comments