உலக கேடட் செஸ்: இந்திய அணி விலகல்
புதுடெல்லி: உலக கேடட் செஸ் போட்டியில் இருந்து இந்திய அணி விலகிக் கொண்டுள்ளது.
எகிப்து நாட்டின் ஷர்ம் எல் ஷேக் நகரில் அக்டோபர் 14-ம்தேதி (இன்று) முதல் 23-ம் தேதிவரை உலக கேடட் செஸ் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய அணி அறிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KC0XyVG
No comments