Breaking News

உ.பி சிறுமி பாலியல் வன்கொடுமை: `பாஜக எம்.எல்.ஏ தகுதிநீக்கம்; 25 ஆண்டுகள் சிறை’ - நீதிமன்றம் அதிரடி

உத்தரப்பிரதேசத்தில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பா.ஜ.க எம்.எல்.ஏ ராம்துலாரே கோண்டுவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதி சட்டப்படி, குற்ற வழக்கில் இரண்டு அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனைப் பெற்ற எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்ற அடிப்படையில், ராம்துலாரே கோண்டுவின் தகுதி நீக்கமும் இந்த தீர்ப்பின் மூலம் உறுதியாகியிருக்கிறது.

சிறுமி பாலியல் வன்கொடுமை

இதுகுறித்து வெளியான தகவலின்படி, இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, 2014-ல் நடந்திருக்கிறது. அந்த சமயத்தில், துத்தி சட்டமன்றத் தொகுதியிலுள்ள ஒரு கிராம பஞ்சாயத்து தலைவராக, ராம்துலாரே கோண்டுவின் மனைவி இருந்தார். அப்போதே, தன் மனைவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தில்; நுழைய முயன்றுகொண்டிருந்த ராம்துலாரே கோண்ட், அதே ஆண்டில் நவம்பர் 4-ம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்டவரின் சகோதரர் மயோர்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரணையிலேயே இருந்திருக்கிறது. இன்னொருபக்கம், வழக்கை திரும்பப்பெறுமாறு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்குத் தொடர்ந்து அழுத்தமும் தரப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், துத்தி சட்டமன்றத் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றார் ராம்துலாரே கோண்ட்.

பாஜக எம்.எல்.ஏ ராம்துலாரே கோண்ட்

அதையடுத்து, இந்த வழக்கு வழக்கு சோன்பத்ராவில் உள்ள எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இப்படியிருக்க, கடந்த செவ்வாயன்று இந்த வழக்கில் ராம்துலாரே கோண்ட் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ராம்துலாரே கோண்டுவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

தீர்ப்பு

இதுகுறித்து பேசிய அரசு வழக்கறிஞர் சத்ய பிரகாஷ் திரிபாதி, ``போக்சோ சட்டம் உட்பட பாலியல் வன்கொடுமை பிரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் ஆதாரங்களை அழித்தது தொடர்பான பிரிவுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கில், ராம்துலாரே கோண்ட் குற்றவாளி எனது தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார். எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அஹ்சன் உல்லா கான், ராம்துலாரே கோண்டுவுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்திருக்கிறார். அந்தத் தொகை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும்.” என்றார். மேலும், `நீதி கிடைக்க நீண்ட காலம் ஆனாலும், தீர்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி' என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/KX4yQFB

No comments