Breaking News

நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்: தேடப்பட்டு வந்த 5-வது நபர் சரண்டர்!

நாடாளுமன்றத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு இரண்டு பேர் பார்வையாளர் பகுதியில் இருந்து திடீரென கூட்டம் நடந்து கொண்டிருந்த மக்களவை பகுதிக்குள் குதித்து கலர் புகை நிரம்பிய குப்பியை பயன்படுத்தி புகையை பரப்பினர். நாடாளுமன்றத்திற்குள் நடந்த இச்சம்பவம் பெரும் பாதுகாப்பு குறைபாடாக கருதப்பட்டது. இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்கு வெளியில் நின்று கொண்டு கலர் புகையடித்து போராட்டம் நடத்தினர்.

இதனிடையே லலித் ஷா என்பவர் நாடாளுமன்றத்திற்கு வெளியில் நடந்த நிகழ்வுகளை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கலர் புகையடித்த மனோரஞ்சன், சாகர் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியில் நின்று போராட்டம் நடத்திய நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை ஒரு வாரம் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதில் லலித் ஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் திடீரென அவர் நேற்று இரவு டெல்லி போலீஸாரிடம் சரணடைந்துள்ளார். லலித் ஷா தனது மொபைல் போனில் நடக்கும் சம்பவங்களை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். சரணடைந்த லலித் ஷாவை இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு பிரிவிடம் ஒப்படைக்கபட்டுள்ளார்.

கொல்கத்தாவை சேர்ந்த ஆசிரியரான லலித் ஷா, போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில், டெல்லியில் இருந்து பஸ் மூலம் ராஜஸ்தானில் உள்ள நாகவுர் என்ற இடத்திற்கு சென்று இரண்டு நாட்கள் ஹோட்டலில் தங்கியதாகவும், போலீஸார் தன்னை தேடுவதாக அறிந்ததும் வந்து சரணடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவருடன் மகேஷ் என்பவரும் போலீஸ் நிலையம் வந்திருந்தார்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை, மணிப்பூர் பிரச்னையை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று விரும்பியுள்ளனர். தங்களது விருப்பம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதற்காக இது போன்ற காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். பகத்சிங் ரசிகர் கிளப் என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை இவர்கள் வைத்துள்ளனர். லலித் ஷாதான் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ள கலர் பொடி தாக்குதலுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்றம்

அவரிடமிருந்து மொபைல் போன் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அவர் அனைத்து தகவல்களையும் அழித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இச்சம்பவத்தில் வேறு இரு அமைப்புகளுக்கு இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாத தாக்குதல் போன்று இச்சம்பவம் நடந்திருந்தாலும் இதில் தீவிரவாத அமைப்பு எதுவும் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கில் இதனை செய்து இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அதேசமயம் போலீஸில் சரணடைந்த லலித் ஷாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க.குற்றம் சாட்டி இருக்கிறது. மேற்கு வங்க பா.ஜ.க.தலைவர் சுகந்தோ ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார். அதில் லலித் ஷா திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/j4roOJI

No comments