சென்னை வெள்ளம் | “அனைவரும் பாதுகாப்பாக இருப்பதே முக்கியம்” - டேவிட் வார்னர்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக தலைநகர் சென்னையில் கனமழை பதிவானது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். மழை வெள்ள பாதிப்பு குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் பகிர்ந்துள்ளார்.
“சென்னையின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் வருத்தமடைந்துள்ளேன். இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுடனும் இந்நேரத்தில் எனது எண்ணம் உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மேடான இடத்துக்கு செல்லலாம். நிவாரண பணிகளுக்கு உதவ வாய்ப்புள்ளவர்கள் அதற்கு ஆதரவு அளிக்கலாம். இயன்றவரை ஆதரவளிக்க ஒன்றுபடுவோம்” என வார்னர் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XRGo64Y
No comments