தினமும் 1.63 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: 2 லட்சம் இலக்கை விரைவில் எட்ட சுகாதாரத் துறையினர் திட்டம்

தமிழகத்தில் தற்போது தினமும் 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒருநாளைக்கு 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கு விரைவில் எட்டப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதாரம், காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கும், அடுத்தகட்டமாக மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரையுள்ள, இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2OPX1Oe
via
No comments