கூவத்தூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
கூவத்தூர் அருகே ஈசிஆர் சாலையில் தனியார் மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 3 பெண்கள் உள்பட 5 பேர் இறந்தனர். படுகாயமடைந்த 6 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அடுத்த இராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் கல்பாக்கம் அடுத்த ஆர்எம்ஐ நகரில் நடைபெற இருந்த சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தனியார் பேருந்தில் ஈசிஆர் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vmW6UZ
via
No comments