மனித-விலங்கு மோதலை தடுக்கும் வகையில் யானைகள் நடமாட்டத்தை அறிய உதவும் தொழில்நுட்பம்: முதல் முறையாக கூடலூர் வனக் கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பலன்

கூடலூர் வனக்கோட்டத்தில் மனித - விலங்கு மோதலை தடுக்க புதிய முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் யானைகள்நடமாட்டத்தை கண்காணித்து மக்களுக்கு தெரிவிக்க முன்னெச்சரிக்கை கருவிகள், வாட்ஸ் அப் ஆகிய தொழில்நுட்பங்களை வனத்துறை பயன்படுத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில், கடந்த 10ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்டோர் காட்டு யானை தாக்கி இறந்துள்ளனர். மேலும், விவசாயப் பயிர்களை நாசம் செய்வதோடு, குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வனத்துறையினர், பொதுமக்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வனத்துறைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக மனித - விலங்குமோதல் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபெறுவதால், யானைகள் தாக்கி தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழப்பு அதிகளவில் ஏற்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vtT1Ct
via
No comments