பல்லாவரம் குப்பை கிடங்கில் தீ விபத்து

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், பல்லாவரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. சமீபகாலமாக அங்கு குப்பை, கழிவுகளை அகற்றாததால் நாளுக்கு நாள் அதிகரித்து, மலைபோல குப்பை தேங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை குப்பைக் கிடங்கில் திடீரெனத் தீப்பற்றியது. தீ கொளுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. தகவலறிந்து தாம்பரம், வேளச்சேரி, அசோக் நகரில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30-க்கும் மேற்பட்ட வீரர்கள், சுமார் 10 மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். எனினும், அப்பகுதியில் தொடர்ந்து கடும் புகைமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3n2KljI
via
No comments