வில்வித்தையில் தங்கம் வென்றது இந்திய ஜோடி
உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் நட் சத்திர ஜோடியான தீபிகா குமாரி, அட்டானு தாஸ் ஜோடி தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். அதேவேளையில் தீபிகா குமாரி அணிகள் பிரிவிலும் தங்கம் வென்று அசத்தினார்.
கவுதமாலாவில் நடைபெற்ற உலகக் கோப்பை முதற்கட்ட தொடரில் மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 27-26 என்ற புள்ளிகள் கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்த பிரிவில் இந்திய அணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தங்கம் வென்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eCdCOc
No comments