இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு பயணம் செய்தவர் பெட்ரோலுக்கு பணம் தராததால் கொலை: கொளத்தூரில் இளைஞர் கைது

இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு பயணித்தவர், பெட்ரோலுக்கு பணம் தராததால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை கொளத்தூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் வளர்மதி நகரின் முதலாவது பிரதான சாலையில் 45 வயதுள்ள நபர் ஒருவர் கடந்த 4-ம் தேதி அதிகாலை இறந்துகிடந்தார். தகவல் கிடைத்து வந்த கொளத்தூர் போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tgurog
via
No comments