காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தீவிரம்; இரு வாரங்களில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: தேவையின்றி வெளியே வர வேண்டாமென மருத்துவர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கடந்த இரு வாரங்களில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனாவுக்கான தனி வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 250-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. கரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கு ஆக்சிஜன் செலுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், நோயின் தீவிரம் காரணமாக பலர் உயிரிழந்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yNNBox
via
No comments