Breaking News

கரோனா முடிந்ததும் வந்துவிடுவேன்.. கட்சியை சரிசெய்துவிடலாம்: சசிகலாவின் தொலைபேசி உரையாடல் வெளியானது

‘‘கரோனா முடிந்ததும் நான் வந்துவிடுவேன், கவலைப்படாதீர்கள். கண்டிப்பாக கட்சியை சரிசெய்துவிடலாம்’’ என்று தொண்டர் ஒருவருடன் சசிகலா பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது தோழி சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017 மார்ச் 14-ம் தேதி சிறை சென்றார். அவரது 4 ஆண்டு சிறை வாசம் முடிந்த நிலையில், கடந்த ஜனவரி 27-ம் தேதி விடுதலையானார். ஆனால், அப்போது அவருக்கு கரோனா பாதிப்பு இருந்ததால் பெங்களூருவிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p0MgGv
via

No comments