பிராமணர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: ஆளுநருக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

தமிழகத்தில் பிராமண சமூகத்தினர் பாதிக்கப்படுவதை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றுஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின்தலைமையிலான திமுக அரசின் ஆதரவால், பதற்றமான சூழல்உருவாகியுள்ளது. பிராமணர் களை குறிவைத்து, அவர்கள் மீதுவார்த்தை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுகிறது. இது ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசின், தொடக்ககால நிகழ்வுபோல இருக்கிறது. குறிப்பாக பிராமணர் சமூகத்தின் சிரியர்கள், பூசாரிகள் குறிவைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்துதாங்கள் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். இந்த நிலைக்கு திராவிடர் கழகம், திமுகவில் உள்ள சிலர்மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள்தான் காரணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vySBvd
via
No comments