“உயிர்காற்று கூட கிடைக்காத பேரிடர் காலத்தில் நீங்க முதல்வர் ஆகியுள்ளீர்கள்”- சூர்யா

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார் திமுக தலைவர் ஸ்டாலின். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில்,க முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’’முடித்தே தீர்க்கவேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ‘மக்களின் முதல்வராக’ பொறுப்பேற்றுள்ள மு.க ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

சுவாசிப்பதற்கு ‘உயிர்காற்று’கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த தமிழக அமைச்சர்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்’’ என்று கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3h9yKOD

No comments