அரசு மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் இருக்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு

அரசு மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உடனிருந்து கவனிக்க, அவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை கவனித்துக் கொள்ள, உறவினர் ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். இந்நிலையில் நோயாளிகளுடன் இருப்பவர் பொது இடங்களுக்கு எளிதில் செல்லக்கூடியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஏற்படும் தொற்று, மற்றவர்களுக்கும் பரவக்கூடியதாக இருக்கிறது. இதனால், நோயாளிகளுடன் உறவினர்களை இருக்க அனுமதிக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fqpnIc
via
No comments