Breaking News

சென்னையில் நிலத்தடி நீர், காற்றில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்துள்ளதா?- ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை மாநகரப் பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்றில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வல்லுநர்கள் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகரப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அவை அதிக அளவில் குப்பையாக, குப்பை கொட்டும் வளாகங்களுக்கும், சாலையோரப் பகுதிகளுக்கும் செல்கிறது. இதனால் மாநகரப் பகுதியில் சுவாசிக்கப்படும் காற்றில் நுண் பிளாஸ்டிக் மாசு கலந்திருப்பதாகவும், அதனால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wCiwCK
via

No comments