மாயமான அணு ஆராய்ச்சி மைய பொறியாளர் உடல் எரிந்த நிலையில் மீட்பு

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பசுமர்தி நாகேஸ்வரராவ் என்பவரின் மகன் சத்யசாய்ராம்(26). ரசாயன பொறியியல் பயின்றுள்ளார். இவர் கல்பாக்கம் நகரியப்பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பொறியாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 20-ம் தேதி அதிகாலை சத்யசாய்ராம் உடற் பயிற்சிக்காக மிதிவண்டியில் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீடு திரும்பிவில்லை என தெரிகிறது. இதையடுத்து, உடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த பெற்றோர், மகனை காணவில்லை என கல்பாக்கம் போலீஸில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d0WOAw
via
No comments