Breaking News

படகு பழுதாகி தவித்த 7 மீனவர்கள் மீட்பு: கடலோர காவல் படையினர் துரித நடவடிக்கை

தூத்துக்குடி அருகே படகு இயந்திரம் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு படகில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். தூத்துக்குடியில் இருந்து தென் கிழக்கே 55 கடல்மைல் தொலைவில் படகு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அவர்களால் தொடர்ந்து செல்ல முடியாமல் நடுக்கடலில் தவித்தனர். தூத்துக்குடியில் உள்ள மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eemkCX
via

No comments