புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் திமுக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் பரமசிவம். இவர் வெள்ளாளவிடுதி ஊராட்சி மன்றத் தலைவராகவும் உள்ளார். இவர், வெள்ளாளவிடுதி, மங்களாகோவிலில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய விவகாரங்களில் தலையிடுவதால், நெல் கொள்முதல் பணி பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் உ.அரசப்பனிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அண்மையில் விவரம் கேட்ட அரசப்பனை, பரமசிவம் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பரமசிவம் மீது கந்தர்வக்கோட்டை போலீஸில் அரசப்பன் கடந்த வாரம் புகார் அளித்தார். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, திமுக ஒன்றியச் செயலாளர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AYVt7w
via
No comments