மசினகுடி அருகே மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ‘ரிவால்டோ' யானையை வனத்தில் விடுவிக்க உத்தரவு
மசினகுடி அருகே வாழைத் தோட்டத்தில் மரக்கூண்டில் அடைக்கப் பட்டுள்ள ரிவால்டோ யானையை வனத்தில் விடுவிக்க, தலைமை வன உயிரின காப்பாளர் சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வாழைத்தோட்டம், மாவனல்லா ஆகிய பகுதிகளில் 45 வயதுடைய ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றித்திரிந்தது. தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண் பார்வை குறைபாடு காரணமாக வனப்பகுதிக்குள் செல்லாமல், குடியிருப்புப் பகுதிகளிலேயே நடமாடிய ரிவால்டோ யானை, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இந்த யானையை, கடந்த மே 5-ம் தேதி பிடித்த வனத்துறையினர், கரால் எனும் மரக்கூண்டில் அடைத்து, 50 நாட்களுக்கும் மேலாக மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3B9sUEN
via
No comments