Breaking News

ஒலிம்பிக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்திய மகளிர் ஹாக்கி அணி? அர்ஜெண்டினாவுடன் மோதல்

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜெண்டினாவை இன்று எதிர்கொள்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி பிரிவில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா, முதல் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. எனினும் கடைசி இரு ஆட்டங்களில் அயர்லாந்து மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளை வீழ்த்தி, கால் இறுதிக்கு முன்னேறியது. கால் இறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருந்த பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

காலிறுதி வரை கூட முன்னேறாது என கணிக்கப்பட்ட இந்திய அணி, தங்கம் வெல்லும் என கணிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சர்வதேச அரங்கையே திகைப்பில் ஆழ்த்தியிருந்தது. அதே நம்பிக்கையுடன் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், அர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது.

இதேபோல மகளிர் 69 கிலோ எடைப்பிரிவில் பதக்கத்தை உறுதி செய்துள்ள இந்திய வீராங்கனை லவ்லினா, அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை புஷானெஸ் சுர்மெனலியை எதிர்கொள்கிறார். இப்போட்டி இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2WUfTPJ
via

No comments