Breaking News

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

முதல் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெறுகிறது. மயங்க் அகர்வாலுக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால் இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் கே.எல் ராகுல், ஹனுமா விஹாரி, அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய மூவரில் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்கலாம் எனத் தெரிகிறது.

டெஸ்ட் தர வரிசையை பொறுத்தவரை இந்திய அணி 2-ஆவது இடத்திலும் இங்கிலாந்து அணி 4-ஆவது இடத்திலும் உள்ளன. இதுவரை இந்தியாவும் இங்கிலாந்தும் 126 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தியா 48, இங்கிலாந்து 29 போட்டிகளில் வென்றுள்ளன.

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 62 போட்டிகளில் 34 போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ள நிலையில் இந்தியா 7 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/37ixNxv
via

No comments